சென்னை : அல்லு அர்ஜுன் -அட்லி கூட்டணி சேரும் புதிய படத்தில் 5 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்க உள்ள புதிய படத்தில், 5 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்க்ரிப்டின் படி 5 நடிகைகள் தேவைப்படுவதாகவும், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட 3 வெளிநாடுகளைச் சேர்ந்த நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், மெயின் ஹீரோயினாக ஜான்வி கபூரும், மற்றொரு இந்திய நடிகையும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி அடுத்தது யாரை வைத்து படம் இயக்குவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது 5 ஹீரோயின்களை வைத்து அல்லு அர்ஜுனாவை கதாநாயகனாகி புதிய படத்தை இயக்குவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பாக பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து இயக்கிய படம் அட்லிக்கு பெரும் பெயரை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.