May 6, 2024

மாணவர்களுக்கு மலிவு விலையில் மடிக்கணினி..

டெல்லி: இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் ஒரு புதுமையான கற்றல் முறையாக ஆன்லைனில் கற்கிறார்கள். ஆனால், இந்தியாவில் சுமார் 23 கோடி குழந்தைகளுக்கு லேப்டாப் சாதனம் இல்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர்களுக்கு மின் கற்றலின் பலன் சரியாக கிடைப்பதில்லை. அந்த சிக்கலை தீர்க்க பிரைம்புக் மலிவு விலை மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரைம்புக்ஸ் என்பது ஷார்க் டேங்க் சீசன் 2 மூலம் நிதியளிக்கப்பட்ட நிறுவனம். இப்போது நிறுவனம் இந்திய சந்தையில் ‘ப்ரைம்புக் 4ஜி’ என்ற மலிவு விலை மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 11ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Primebook 4G சிறப்பு அம்சங்கள்

இந்த லேப்டாப் பிரைம் ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும்
இதில் MediaTek MT8788 செயலி உள்ளது
4ஜிபி ரேம்
64ஜிபி சேமிப்பு திறன் (200ஜிபி வரை விரிவாக்கக்கூடியது என அறிவிக்கப்பட்டுள்ளது)
இதன் திரை அளவு 11.6 இன்ச்
7.6V 4000mAh UTL பேட்டரி
USB போர்ட், 3.5mm இயர்போன் ஜாக்
இதன் விலை ரூ.16,990
இருப்பினும், அறிமுகச் சலுகையாக, 2,000 ரூபாய் வரை தள்ளுபடிகள், மாதாந்திர தவணைத் திட்டம் போன்றவை உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!