June 16, 2024

இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டியதாக 2 PFI உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்காக முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) 2 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முகமது ஆசிப் (எ) ஆசிக், ராஜஸ்தானின் கோட்டாவில் PFI இன் நிறுவன உறுப்பினர். பாரனை சேர்ந்தவர் சாதிக் சரப். இவர்கள் இருவரும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட தூண்டி தங்கள் இயக்கங்களில் சேர்த்துக் கொண்டதாக புகார் எழுந்தது. என்ஐஏ அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவர் மீதும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகையை என்ஐஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2022 செப்டம்பரில் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டியதாகவும், ஆயுதங்கள் வாங்குவதற்கும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் நிதி திரட்டியதாகவும் குற்றப்பத்திரிகையில் என்ஐஏ கூறியது.

பயிற்சி முகாம்: முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைப்பதற்காக பயிற்சி முகாம்களையும் நடத்துகின்றனர். நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சியை நிலைநாட்ட முஸ்லிம் இளைஞர்களை ஊக்குவித்து மூளைச்சலவை செய்து மத மோதல்களை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!