வருமானவரித் துறையின் முடிவின் படி, பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்களில் இருந்து ரூ.600 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் 2023 ஆம் ஆண்டின் ஜூன் முதல் 2024 ஜனவரி வரை பல்வேறு காலக்கெடுகளுக்குப் பிறகு வசூலிக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் 31 -ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பான் மற்றும் ஆதார் இணைக்காதவர்கள்:
– 2024-ஆம் ஆண்டின் ஜனவரி 29 வரை 11.48 கோடி பான் கார்டுகள் ஆதார் இணைப்பின்றி இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
2023 -ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் பான்-ஆதார் இணைப்பு செய்யாதவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
– இதில், 2023-ஆம் ஆண்டின் ஜூலை முதல் ஜனவரி வரை 601.97 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இணைக்காதவர்கள் எவ்வாறு அபராதம் செலுத்த முடியும்?:
1. வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று “Link Aadhaar” செக்ஷனை தேர்வு செய்யவும்.
2. பான் மற்றும் ஆதார் கார்டு நம்பர்களை வழங்கி, OTP மூலம் செயல்முறையை முடிக்கவும்.
3. e-Pay Tax மூலம் பணம் செலுத்தி, அபராதத்தை கட்டவும்.
எப்போது பான் கார்ட் செயலிழக்கலாம்?
2024-ஆம் ஆண்டின் டிசம்பர் 31-க்கு பிறகு, இணைக்காத பான் கார்டுகள் செயலிழக்க கூடும் என அரசுஅறிவித்துள்ளது.