May 21, 2024

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: ‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம் ‘பர்ஹானா’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் இயக்குனர் செல்வராகவன், ஜிதன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பர்ஹானா’ திரைப்படம் (மே 12) திரைக்கு வந்தது. இந்தப் படம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பர்ஹானா படத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!