நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 48 தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளை சேதப்படுத்திய புல்லட் காட்டு யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
80 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையின் இருப்பிடம் மற்றும் நடமாட்டத்தை டிரோன் கேமரா,கும்கி யானைகள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தி வந்த புல்லட் காட்டு யானையை, 2 கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமிரா உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அய்யங்கொள்ளி பகுதியில் யானை இருப்பது தெரியவந்துள்ளதால் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்களுடன் வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.