ரஷியா: அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான AN-24 பயணிகள் விமானம் ஐந்து குழந்தைகள் உள்பட 43 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 49 பேருடன் சென்று கொண்டிருந்த போது மாயமானது.
ரஷியாவின் கிழக்கே வெகு தூரத்தில் சீனா எல்லையில் உள்ள பிராந்தியம் அமுர். இந்த பிராந்தியத்தில் டிண்டா என்ற நகர் உள்ளது. இந்த நகருக்கு சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான AN-24 பயணிகள் விமானம் இன்று ஐந்து குழந்தைகள் உள்பட 43 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 49 பேருடன் சென்று கொண்டிருந்தது.
விமானம் டிண்டா அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து திடீரென விலகியது. அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.