சென்னை: தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனையை திமுக எழுப்பியுள்ளதற்கு என்ன காரணம் தெரியுங்களா என்று மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆளும் கட்சியான திமுக தனது ஊழலை மறைக்கவும், வரவிருக்கும் தேர்தலில் தோல்வியை சந்திக்காமல் இருக்கவும் பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளது.
அதில் ஒன்று தான் மொழி மற்றும் தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனை. தொகுதி மறு சீரமைப்பு செய்தால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என்று அவர் பதிவிட்டுள்ளார்.