புதுடில்லி: தொகுதி மறுவரையறையில் தொகுதிகள் குறையுமா?அல்லது உயருமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
தொகுதி மறுவரையறை குறித்து அமித் ஷா கூறிய கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.
முன்னதாக கோவை வந்திருந்த அமித் ஷா தென் மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறையாது என பேசியிருந்தார். இது குறித்து பேசிய வேணுகோபால் மொத்த தொகுதிகளையும் உயர்த்தும்போது, தென்மாநிலங்களில் குறையாது என கூறுவது முரணாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.