அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற வீட்டு விழாவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
வியன்னா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில் அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
உயிரிழந்தவர்கள் 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
