ஜப்பானின் ஓகினாவா தீவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமெரிக்க கடற்படை வீரர் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த 20 வயதான வீரர் டெவின் ஜேக்கப் பல்லார்ட் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக ஜப்பான் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அமெரிக்காவிடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
ஓகினாவாவில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அதிக அளவில் இருப்பது குறித்து ஏற்கனவே உள்ளூர் மக்களிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில், இந்த சம்பவம் அந்த எதிர்ப்பை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
