எத்தியோப்பியா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவின் புதிய அதிபராக அந்நாட்டின் நிதி அமைச்சர் தயே அட்ஸ்கே செலைசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஸாலே ஜிவ்தேவின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய அதிபரை, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.
பதவியேற்புக்குப் பின், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய புதிய அதிபர் தயே அட்ஸ்கே, சீனாவுடனான எத்தியோபியாவின் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.