பெய்ஜிங்: சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனாவைப் போலவே, இந்த வைரஸ் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. புதிய வைரஸால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
வைரஸ் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சீன சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், புதிய வைரஸ் குறித்து சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார நிறுவனமோ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனினும், சீனாவின் சில பகுதிகளில் நிமோனியா பரவி வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆணையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த குளிர்காலத்தை ஒப்பிடும்போது, இந்த குளிர்காலத்தில் நுரையீரல் தொடர்பான வைரஸ் பரவல் குறைவாக உள்ளது. தற்போதைய வைரஸால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“வைரஸின் பரவல் குறிப்பாக சீனாவின் வடக்கு மாகாணங்களில் அதிகமாக உள்ளது.” மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதாரப் பணிகள் இயக்குநர் ஜெனரல் அதுல் கோயல் கூறுகையில், “”எச்.எம்.பி.வி., வைரஸுக்கு மருந்து, மாத்திரை எதுவும் இல்லை. பொது சிகிச்சை மட்டுமே அளிக்க முடியும். வைரஸ் பரவாமல் தடுப்பதே சிறந்தது. எச்.எம்.பி.வி வைரஸைப் பற்றி பீதி அடையத் தேவையில்லை, இது ஒரு சாதாரண வைரஸ் தொற்று ஆகும்.