ரஷ்யா: தொழில்நுட்ப கோளாறால் விபத்து… தென்மேற்கு ரஷ்யாவின் கலுகா பகுதியில் Mi-28 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. உக்ரைன் எல்லையில் இருந்து 93 மைல் தொலைவில் உள்ள காட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற விமானி உயிரிழந்தார். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை டாஸ் மற்றும் இன்டர்பேக்ஸ் ஆகிய 2 செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. 2 வருடங்களாக உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டுள்ள நிலையில், உக்ரைனின் சதிகள் ஏதும் உள்ளதா?என எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.