ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் மாயமாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பிரேசிலில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த 22ம் தேதி இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் 3 லாரிகள், பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் குறைந்தது 2 கார்கள் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து அங்கு கடற்படை, போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் மாயமாகியுள்ளனர் என்று பிரேசில் கடற்படை இன்று தெரிவித்துள்ளது. மாயமான 9 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் விழுந்த 3 லாரிகளில் இரண்டில் கந்தக அமிலம் இருந்ததால், அப்பகுதியில் உள்ள 19 நகராட்சிகளில் குடிநீரை பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.