சீனாவிற்கான இந்திய தூதர் சுபெய்ஹோங் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், கடந்த நான்கு மாதங்களில் இந்தியர்களுக்கான விசா விநியோகம் குறித்து தகவல் பகிரப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 9 வரை, இந்தியாவிலுள்ள சீன தூதரகம் 85,000க்கும் அதிகமான விசாக்களை இந்தியர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், “இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, தோழமையான சீன நாட்டின் அனுபவத்தை பெறுங்கள்” என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான மறைமுக வரி போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. டிரம்ப் தலைமையில் அமெரிக்கா தொடங்கிய இந்த வரி நடவடிக்கைக்கு எதிராக சீனாவும் பதிலடி கொடுத்து, அமெரிக்கா மீது வரி விதித்தது. மேலும், சீன அரசு தனது மக்களுக்கு அவசியமின்றி அமெரிக்கா பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.
இந்த வரிப்போரில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை என்ற பார்வையும் சமூகத்தில் காணப்படுகிறது.