அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனையில் தன்னை மத்தியஸ்தமாக அமைய தயார் எனத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்ட அவர், இந்த மோதல் இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் துணிச்சலான தீர்மானங்களைப் பாராட்டிய அவர், இது வரலாற்றில் முக்கியமான ஒரு நேரமாகும் என்றும் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா பதிலடி கொடுத்து பல நகரங்களில் தாக்குதல் நடத்தியது. இதில் பிற நாடுகளின் அழுத்தம் காரணமாக, இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் செய்வதாக முடிவெடுத்தன. இந்த முடிவை வரவேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தலையீட்டால் இந்த சமாதானம் சாத்தியமானது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது, வர்த்தக ஒப்பந்தங்களை அதிகரிக்க இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீர் பிரச்சனையில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க முடியுமா என்பதை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைத்துவத்துக்கு கடவுளின் ஆசிர்வாதம் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள நிலைப்பாடு சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா இதற்கு என்ன பதில் அளிக்கும் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க சர்வதேச முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதி நீடிக்குமா என்பது எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.