அமெரிக்கா: போதும் நிறுத்துங்கள் புதின் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். எதற்காக தெரியுங்களா?
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே இரவில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 குழந்தைகள் உட்பட 63 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் தனது அரசு முறை பயணத்தை பாதியில் ரத்து செய்த அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் திரும்பினார்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வாரம் 5,000 வீரர்கள் சாகிறார்கள். இது தேவையில்லை, போதும் நிறுத்துங்க புடின். அமைதி ஒப்பந்தம் செய்வோம் என்று தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.