புதுடெல்லி: போலினா அகர்வால் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவர் பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார். தற்போது உத்தரகாண்ட் மாநிலம் குர்கானில் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைக்காக பிரதமர் மோடி மற்றும் வீரர்களை அவர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அது தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தபோது, ரஷ்யாவில் உள்ள என் பாட்டி ரஷ்யாவுக்கு, தனது தாய்நாட்டிற்கு வரச் சொன்னார். என் தாய்நாடு எது? இது என் வீடு. நான் இங்கேயே இருப்பேன் என்று நான் அவரிடம் கூறியுள்ளேன். இந்திய வீரர்கள் இரவும் பகலும் எல்லையைக் காத்து வருகின்றனர். தேசத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது வணக்கம். எல்லையை இரவும் பகலும் பாதுகாப்பதால்தான், நாட்டு மக்கள் இரவில் இங்கு நிம்மதியாக தூங்க முடிகிறது.
ரஷ்யாவால் வழங்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் உள்ளன. எதிரி நாட்டிலிருந்து பறக்கும் ட்ரோன்கள், ஜெட் விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட எதையும் எதிர்கொள்ளும் திறன் ராணுவத்திற்கு உள்ளது. பதற்றம் ஏற்படும் போது தயாராக இருப்பதற்காக இந்திய ராணுவத்தைப் பாராட்ட வேண்டும்.
தன்னலமின்றி நாட்டிற்காகப் போராடும் வீரர்களை நாம் பாராட்ட வேண்டும். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். துணிச்சலான முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடியையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 1,22,000-க்கும் மேற்பட்டோர் அவரது வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.