லண்டன்: லண்டனில் உள்ள பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
சந்தேக நபர்களை தேடி ராணுவம் ஒவ்வொரு பகுதியாக முன்னேறி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.