வாஷிங்டன்: இந்திய தொழிலதிபர் அதானி மற்றும் அவரது நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), இந்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் உதவியை நாடியுள்ளது. அமெரிக்காவில் சூரிய மின்சக்தி திட்டங்களைப் பெற அதானி ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்க முதலீடுகளைப் பெறுவதற்காக அதானி பல இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது, இது ஒரு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், இந்தியாவில் பொருத்தமான சட்ட நடைமுறைகள் மூலம் அதானி மீது வழக்குத் தொடர அமெரிக்க அரசாங்கம் ஆதரவைப் பெற விரும்புகிறது. நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.