டெல் அவிவ் நகரில் இஸ்ரேலின் மீது ஈரான் மேற்கொண்ட புதிய ஏவுகணை தாக்குதலால் அதிர்வலைகள் உருவாகி உள்ளன. இந்த அதிர்ச்சியான தாக்குதல்கள், இயற்கையாக ஏற்படும் வெடிவிபத்துகளை விட வேறுபட்ட மற்றும் தீவிரமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் 1,000 கிலோ வெடிபொருட்கள் வீசப்பட்டதால், வெடிப்பு நிகழும் இடத்தை சுற்றியுள்ள 100 மீட்டர் சுற்றளவில் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளன.

100 மீட்டரை தாண்டி 500 மீட்டர் வரை உள்ள கட்டிடங்களும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. வெடிப்பின் அதிர்வலைகள் மனிதர்களின் உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, காதுச்சுருளில் ஏற்படும் பாதிப்புகள், செவித்திறன் குறைபாடு, காதுகளில் சத்தம் கேட்பது மற்றும் தலைச்சுற்றல் போன்றவை அடிக்கடி ஏற்படுகின்றன.
அதிர்ச்சி அலைகள் நுரையீரல் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, உள் இரத்தப்போக்கை உருவாக்கி, மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் சுருங்குதல் போன்ற ஆபத்தான நிலைகளையும் உருவாக்குகின்றன. வயிறு, குடல், உறுப்பு உள்ளிட்ட பாகங்களிலும் உள் காயங்கள் உருவாகின்றன.
தசை மற்றும் எலும்பு இடையே ஏற்படும் அழுத்தங்களால் கூடுதல் காயங்கள் ஏற்படுகின்றன. வெடிக்கும்போது பறக்கும் உலோக துண்டுகள், மரம் மற்றும் கண்ணாடிகள் உடலை தாக்கி இரண்டாம் நிலை காயங்களை ஏற்படுத்துகின்றன. அதிர்வலைகள் இதயத்தைப் பாதித்து உயிருக்கு ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
இதெல்லாம் நேரடியாக தாக்கம் பெற்ற இடத்திலிருந்து 500 மீட்டர் வரை உள்ள மக்களுக்கு ஏற்படுகின்றது. ஆனால் அதேவேளை, 1 கிலோமீட்டருக்கு அப்பால் இருப்பவர்களுக்கும் காதுச்சுருள் கிழியலும், குறைந்தளவு உடல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெடிகுண்டுகளை பெரிதும் தடுக்கும் நிலையில், உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஆனால் தாக்குதல்களை தடுக்க முடியாத சில ஏவுகணைகள், இந்த அலைகளை உருவாக்கி அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மனநல பாதிப்புகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெடிபாதிப்பு மற்றும் அதிர்ச்சி காரணமாக மன உளைச்சல், பயம், PTSD போன்ற நிலைகள் பாதிக்கப்பட்டவர்களில் உண்டு.
இப்போது இஸ்ரேல் மக்கள் எதிர்கொள்வது வெடிபாதிப்புகள் மட்டுமல்ல, அதன் பிந்தைய வாழ்க்கை முழுவதும் தொடரும் உடல் மற்றும் மனநல தாக்கங்கள். இதை ஒரு புதிய பிரச்சனையாக இஸ்ரேல் அரசு கருதி வருகிறது.