இஸ்ரேல்: காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இதற்காக ராணுவத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், அவசரகால படைப்பிரிவைச் சேர்ந்த 60,000 வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காசாவின், 75 சதவீத பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. பிணைக் கைதிகளை விடுவித்து, ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டால், போர் நிறுத்தத்திற்கு தயார் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.