இஸ்ரேல்: சொந்த மண்ணில் ஈரானுக்கு உளவு பார்த்த தம்பதியை இஸ்ரேல் போலீஸ் கைது செய்துள்ளது.
இஸ்ரேல்- காசா இடையிலான போர் காரணமாக ஈரானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொள்ளப்பட்டதற்கு பிறகு இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த வாரத்தில் இஸ்ரேல் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நாட்டிலேயே ஈரான் உளவு பார்ப்பதற்கான ஆட்களை தாயர் படுத்தியுள்ளது என்ற செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டு குழுக்கள் ஈரானுக்கு உளவு பார்த்ததாக, அதில் உள்ளவர்களை கைது செய்தது இஸ்ரேல் போலீஸ். இந்த நிலையில் தற்போது ஒரு தம்பதி உளவு வேலை பார்த்தாக சந்தேகித்து கைது செய்துள்ளனர்.