நியூயார்க்: ஜேம்ஸ்பாண்ட் படத்தின் வில்லன் நடிகரான டெக்கி காரியோ புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரை 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. சீன் கானரி தொடக்க கால படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார்.
அவருக்கு பிறகு ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து புகழ் பெற்றார். கடைசியாக வெளியான 5 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தவர் டேனியல் கிரேக். கடைசியாக 2021ல் ‘நோ டைம் டூ டை’ என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஜேம்ஸ்பாண்ட் படமான ‘கோல்டன் ஐ’ படத்தில் டெக்கி காரியோ வில்லனாக நடித்துப் பிரபலமானார். ஹாலிவுட்டில் வெளியான பேட் பாய்ஸ், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட் என பல படங்களில் நடித்துள்ளார். பிரெஞ்சு படங்களான, த மெசஞ்சர், கிங் ஆப் டிராகன் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பிரான்ஸின் பிரித்தானியில் வசித்து வந்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார்.