இஸ்லாமாபாத்: அமெரிக்கா 20 வருடமாக போர் செய்து வீழ்த்த முடியாத தாலிபான் மீது பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொண்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தளங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.2021ம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்பு, தாலிபான் ஆட்சியை உடனே கைப்பற்றியது.
அதற்குப் பின்னர், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் நடவடிக்கைகள் அதிகரித்தன. இந்த அமைப்பு பாகிஸ்தானைச் சீர்குலைக்க முயலும் தீவிர இயக்கமாக இருந்தது.பாகிஸ்தானின் அண்மைத் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணம் பலத்த சேதத்தை சந்தித்தது. வான்வழி தாக்குதலில் 15 பேர், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தாலிபான் நிர்வாகம் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தது. விரைவில் தாலிபான் அமைப்பு பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவில் தீவிரமான மோதல் உருவாக வாய்ப்பு உள்ளது.Chat