புதுடில்லி: நடுக்கடலில் தத்தளித்த 12 இந்திய மாலுமிகளை பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளது.
பாகிஸ்தான் அருகே கடலில் தத்தளித்த 12 இந்திய மாலுமிகளை பாகிஸ்தான் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
அல் பிரானிபிர் என்ற இந்திய சரக்கு கப்பல், பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட அரபிக் கடல் பகுதி வழியாக சென்றபோது கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது. அதிலிருந்த 12 மாலுமிகளும் Lifeboat உதவியுடன் தப்பித்த நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படைக்கு மும்பையிலிருந்து தகவல் அளிக்கப்பட்டது.
Lifeboat-இன் இருப்பிடத்தை விமானம் மூலம் தேடிக்கண்டுபிடித்த பாகிஸ்தான் கடற்படையினர், கப்பலில் சென்று 12 மாலுமிகளையும் மீட்டனர்.