இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவத்தினர் மீது இஸ்ரேல் குடிமக்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நேதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலால் அக்கிரமிக்கப்ட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைத் தாக்கியுள்ளனர்.
பாலஸ்தீன கிராமமான காஃப்ர் மாலிக்கிற்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவ வாகனங்களுக்கும் தீ வைத்து அழித்தனர்.
அவர்கள் கூட்டத்தை நெருங்கியபோது, அவர்கள் படையினரைத் தாக்கி பாதுகாப்பு வாகனங்களை அழித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.
இந்த மக்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர் என்றும், அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் நேதன்யாகு மேலும் கூறினார்.