ஒட்டாவா: கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் வழிபாட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள பிராம்ப்டனில் ஒரு இந்து கோவில் உள்ளது. எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த கோவில் வளாகத்திற்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், பக்தர்கள் மீது கட்டையால் தாக்கினர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் ட்ரூடோ தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இன்று நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஒவ்வொரு கனேடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி.யான சந்திரா ஆர்யா, சமூக வலைதளப் பதிவில், ‘காலிஸ்தான் பயங்கரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டனர். பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் வளாகத்திற்குள் வழிபாட்டாளர்கள் மீது காலிஸ்தானிகள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் இடமாக கனடா மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராம்ப்டன் மேயர் கூறியதாவது: மத சுதந்திரம் கனடாவில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும். வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நடக்கும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களை ஒன்றிணைத்து குழப்பத்திற்கு முடிவுகட்டுவேன்.