கத்தார்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளிலிருந்து முழுமையாக விலகுவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைப்பதாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் 2500 லெபனானியர்கள் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் தலைநகர் பெய்ரூட் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை துறந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பக்கத்து நாடான சிரியாவுக்கு எல்லை வழியாக லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இதுதவிர்த்து ஈரான் – இஸ்ரேல் மோதலும் முற்றியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த அக்டோபர் 1ம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலால் நிலைமை மோசமானது. இதற்கு பதிலடியாக ஈரான் நிலைகள் மீது இஸ்ரேலும் தாக்கியது.
அடுத்ததாக ஈரான் அணு ஆயுத தளங்கள் மற்றும் எண்ணெய்க் கிணறுகளை இஸ்ரேல் தாக்கினால் பதற்றம் அதிகரிக்கும். போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.
இந்த சூழலில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த பிணை கைதி பரிமாற்ற அமைதி பேச்சுவார்த்தை அமெரிக்கா, எகிப்து முன்னெடுப்பில் கத்தார் நாட்டில் வைத்து நடந்து வந்தது. ஆனாலும் இஸ்ரேல் , மற்றும் ஹமாஸ் பிடி கொடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளிலிருந்து முழுமையாக விலகுவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை என விரக்தி தெரிவித்து கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஹமாஸ் அதிகம் கத்தாரில் உலாவுவதும், தோஹா நகரில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் கட்டடம் இருப்பதும் அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது.
சமீபத்தில் முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்காததால் அவர்களை கத்தாரில் இருந்து வேலையற்ற அமெரிக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஹமாஸ் அலுவலகத்தை அடுத்த 10 நாட்களில் மூட கத்தார் உத்தரவிட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் கத்தார் வெளியுறவுத்துறை அதனை மறுத்து எதற்கு வம்பு என்று அமைதி பேச்சுவார்த்தையிலிருந்தே மொத்தமாக விளங்கியுள்ளது.
தற்போதைய நிலைமைக்கு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைத்து தரப்பினரும் தங்கள் விருப்பத்தையும் தீவிரத்தையும் காட்டினால் மட்டுமே தங்கள் முயற்சியை மீண்டும் தொடர்வோம் என்று கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.