உக்ரைன்: உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். 83 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரஷியா உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்காவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் உக்ரைன் – ரஷியா இருவருமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் வடகிழக்கு நகரமான சுமி நகரின் மீது ரஷியா இன்று பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 83 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இது 2023 க்குப் பிறகு உக்ரைன் பொதுமக்கள் மீதான ரஷியாவின் மிகக் கடுமையான தாக்குதலாகும். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். மக்கள் தேவாலயம் செல்லும் நாளில் தெருக்கள், குடியிருப்பு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.