ஸ்பெயின் : கனமழையால் வெள்ளக்காடாக ஸ்பெயின் மாறி உள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பல நகரங்களில் அவசர நிலை அமலாகியுள்ளது.
மன்ஜனாரேஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், கரையோரங்களில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கிருந்து 48 பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் மும்முரம் காட்டப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்ற இடங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.