தைபே : தைவானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதில் 27 பேர் காயமடைந்தனர். இதில் அச்சமடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
தைவானில் நள்ளிரவில் தாக்கிய நிலநடுக்கமானது யூஜிங்கிற்கு வடக்கே 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்ததாகவும், 27 பேர் படுகாயமடைந்ததாகவும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
தைவானில் கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.