அமெரிக்கா: பேச்சுவார்த்தை இருக்காது… வரி விதிப்பு பிரச்னை தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம், “இந்தியா மீது 50% வரியை விதித்த பிறகு, வர்த்தக பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று எதிர்பார்க்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், “இல்லை. பிரச்னை தீர்க்கப்படும் வரை இல்லை” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.