அமெரிக்கா: அமெரிக்காவில் தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் ஜெட் ப்ளூ விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் இரண்டு அடையாளம் தெரியாத சடலங்களை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்குப் பிறகு இந்த விமானம் தெற்கு புளோரிடா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
இந்த விமானத்தின் பராமரிப்பு ஆய்வின் போது இந்த சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சடலங்களின் அடையாளங்கள் தெரியாத நிலையில், அவர்கள் இருவரும் எப்படித் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர் என்பது தெரியவரவில்லை.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.