கீவ்: ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதலால் உக்ரைன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரில் வெளிநாட்டு ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில் நேற்று உக்ரைன் நாடாளுமன்றம் கூடுவதாக இருந்தது. ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டதாக உக்ரைன் எம்.பி.க்கள் தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மும்முரமாக இருப்பதால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.