அமெரிக்கா: தாமத்திற்கான விளக்கம்… ஸ்டார்லைனரில் ஹீலியம் வாயுக் கசிவால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறைபாடு சரி செய்யப்படுவதால் ஸ்பேஸ் எக்ஸ் உதவி தேவையில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த 5ஆம் தேதி சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் பூமிக்கு அழைத்து வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
9 நாட்களில் இருவரும் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார்லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயுக் கசிவை சரி செய்வதில் தாமதத்தால் பூமிக்கு திரும்பும் தேதி அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
எனவே, ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தை அனுப்பி விஞ்ஞானிகள் மீட்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான தேவை எழவில்லை என நாசா தரப்பில் கூறப்பட்டது.