அமெரிக்கா: மெக்சிகோ வளைகுடாவின் பெயர் மாற்றம் செல்லுபடியாகுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
மெக்சிகோ வளைகுடா கடற்பகுதியின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தப் பெயர் மாற்றத்தை சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலவியல் பெயர்கள் நிபுணர்கள் குழு அங்கீகரிக்க வேண்டும்.
அப்போதுதான் உலக நாடுகள் தங்களுடைய வரைபடங்களில் இந்தப் பெயர் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இவ்வாறு இருந்தும் அதிபராக பதவி ஏற்றுள்ள அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. இந்தப் பெயர் மாற்றம் என்ன ஆகும் என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.