இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் தொடர்ந்து பொறுத்துக்கொண்டால், அது தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும். சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பது விரைவில் முழு உலகத்தையும் அழிக்க வழிவகுக்கும். ஏனெனில், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களின் எழுச்சிக்கு பாகிஸ்தான் மையமாக உள்ளது.

எனவே, சர்வதேச சமூகம் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். இந்தியாவும் சர்வதேச சமூகமும் பாகிஸ்தானுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மேலும் இரத்தக்களரி ஏற்படும். பலுசிஸ்தானை விடுவிக்கும் குறிக்கோளுடன் மட்டுமே நாங்கள் செயல்படுகிறோம். எந்தவொரு அதிகார மையம் அல்லது நாட்டின் அழுத்தத்தின் கீழும் நாங்கள் செயல்படவில்லை. நாங்கள் சுதந்திரத்துடனும் ஆயுதப் போராட்டத்துடனும் போராடுகிறோம்.
கடந்த வாரத்தில் மட்டும், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 51 இடங்களில் 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியுள்ளோம். பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை மையங்கள் மட்டுமல்ல, உள்ளூர் காவல் நிலையங்கள், கனிம போக்குவரத்து வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு போன்றவற்றையும் நாங்கள் குறிவைத்துள்ளோம். பி.எல்.ஏ இயக்கத்தைப் பொறுத்தவரை, அது ஒரு கைப்பாவையோ அல்லது அமைதியான பார்வையாளரோ அல்ல. இது ஒரு துடிப்பான மற்றும் தீர்க்கமான இயக்கம். இதைத்தான் ஜீயந்த் பலூச் கூறினார்.