சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அந்தமான் பகுதியில் கூடும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை ஏற்படவுள்ளது.

மே 14ஆம் தேதி தமிழகத்தில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். சில இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்றும் வீசும். கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, திண்டுக்கல் போன்ற மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும்.
மே 15ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மே 16ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை ஏற்படலாம்.
மே 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பல இடங்களில் இடியுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யும். மே 19 மற்றும் 20ஆம் தேதிகளிலும் இதே மாதிரியான மழை நிலவரம் தொடரும். வானிலை மையம் இந்த செய்தியை தெரிவித்துள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.