இந்திய துணைத் தூதர் பிரதிக் மாத்தூர், சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற வருடாந்த் துணைத்தூதுவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEOs) வணிக கூட்டத்தில் பங்கேற்றார். இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் விரிவாக உரையாற்றினார். உலகின் நான்காவது மிகப்பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் G-20 பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதை குறிப்பிட்டு, அதிகரித்து வரும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடாகவும், கல்வியறிவு மற்றும் நுகர்வு ஆர்வம் கொண்ட நடுத்தர வர்க்க மக்களுடன் கூடிய ஒரு பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. தற்போது இந்திய பொருளாதாரத்தின் அளவு 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தாலும், 2047க்குள் அது 30 டிரில்லியன் டாலர்களாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைய தலைமுறையின் ஆதிக்கமும் இந்த வளர்ச்சிக்கு வலுவூட்டுவதாக இருப்பதாக மாத்தூர் கூறினார்.
சமீபத்தில் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. தற்போது ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. 2014-இல் துவங்கப்பட்ட “Make in India” திட்டத்தின் மூலம், இந்தியா உற்பத்தி மையமாக மாறுவதற்கு தேவையான பல ஊக்குவிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் concessional loans, வரிவிலக்கு மற்றும் தயாரிப்பு தொடர்பான ஊக்கங்கள் அடங்கும்.
கொரோனா வைரஸ் காலத்தில் ஏற்பட்ட சப்ளை சிக்கல்களை சமாளிக்க 2020-இல் “Atma Nirbhar Bharat” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் ₹1.97 லட்சம் கோடி முதலீட்டுடன் 14 துறைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொபைல் உற்பத்தி, மருந்துகள், ஆட்டோமொபைல்கள், ஸ்டீல், தொலைத்தொடர்பு சாதனங்கள், உணவுப் பொருட்கள், சோலார் மற்றும் பேட்டரி செல்கள் உள்ளிட்ட துறைகள் இதில் அடங்கும்.
இந்தியா தற்போது சீனாவைத் தவிர உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக உள்ளது. Foxconn போன்ற பெரிய நிறுவனங்கள் iPhone உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியுள்ளன. மேலும் இந்தியா உலக மருந்துத் துறையில் “Pharmacy of the World” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சியில் தொழில்துறை புரட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் நிலையான துறைகளுடன் புதிய வளர்ச்சித் துறைகளும் ஏற்பட்டு வருகின்றன. தொழில்துறை வளர்ச்சி மட்டுமல்லாமல் உலகளாவிய நிறுவனங்களுக்கு தலைமையகமாகவும் இந்தியா முன்னேறி வருகிறது. தொழில்துறை, வணிகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் இந்தியா முன்னேற்றம் காண்பதற்கான வழிகளை உருவாக்கி வருகிறது.
World Bank’s Ease of Doing Business ரேங்கிங்கில் இந்தியா 80 இடங்கள் மேம்பட்டுள்ளது. இதற்கான காரணமாக Insolvency code, RERA, GST போன்ற சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் அதிகரித்துள்ள நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) கூறப்படுகின்றன.
IT துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. Industrial Revolution 4.0, AI, Semi-Conductor உள்ளிட்ட துறைகளில் இந்தியா முக்கிய நிலையை வகிக்கிறது. அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து AI வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருகின்றன.
இந்தியாவின் வணிக மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், உலகத்தின் முக்கிய பொருளாதாரமாக இந்தியாவை உருமாற்றி வருகின்றன.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பல சர்வதேச பிரதிநிதிகள், இந்தியாவின் வளர்ச்சி நடைமுறைகளை பாராட்டி, இந்தியாவுடன் கூட்டாண்மையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தனர்.