By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயக்குனராகும் ரவிமோகன்… கதாநாயகன் யார் தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இயக்குனராகும் ரவிமோகன்… கதாநாயகன் யார் தெரியுங்களா?
சினிமா

இயக்குனராகும் ரவிமோகன்… கதாநாயகன் யார் தெரியுங்களா?

Nagaraj
Last updated: June 13, 2025 6:22 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை : நடிகர் யோகி பாபு நடிக்கும் படத்தை நடிகர் ரவி மோகன் இயக்குகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஃபயர் மோடில் பரபரப்பாக இயங்கி வருகிறார் ரவி மோகன். புத்துணர்ச்சியுடன் இந்தப் புதிய வருடத்தைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என்று மாற்றியிருந்தார். பெயரை மாற்றிய அதே ஜனவரி மாதத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடித்திருந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் போஸ்டர், காணொளிகள் எல்லாம் வெளியாகி, அப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதைத் தாண்டி, கடந்தாண்டு இறுதியில் சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்து, பலரையும் ஆச்சரியப்படுத்தினார் ரவி மோகன்.

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கிறார் ரவி மோகன். மேலும், ரவி மோகனின் 32-வது திரைப்படமான ‘ஜீனி’ படம் குறித்து 2023-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அர்ஜூனன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படமும் ஒருபுறம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் தேவையானி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன் எனப் பல நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர். முக்கியமாக, ரவி மோகனின் சகோதரர் மோகன் ராஜா இயக்கத்திலும் அவர் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கவிருப்பதாக முன்பே தகவல் வெளியாகியிருந்தது.

முதல் பாகத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம்தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பட்டியலைத் தாண்டி, ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்தி யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கிறார்.

இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘ப்ரோ கோட்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் முக்கியமான மற்றொரு விஷயமும் இருக்கிறது. இந்த வருடம் ரவி மோகன் தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தன்னுடைய பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் மூலம்தான் கார்த்தி யோகி இயக்கும் ‘ப்ரோ கோட்’ படத்தைத் தயாரிக்கிறார். பெயர் மாற்றம், தயாரிப்பாளர் என இந்த வருடத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கும் ரவி மோகன், இயக்குநராகவும் கூடிய விரைவில் களமிறங்குகிறார்.

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை ரவி மோகன் இயக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

You Might Also Like

சூர்யா உடனான மறக்க முடியாத வீடியோ கால் சந்திப்பு: நடிகை அனகா நெகிழ்ச்சி!

குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்த சாய் பல்லவி: இணையத்தில் வைரல்!

‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்!

நடிகர் அர்ஜுன் தாஸின் ‘கான்சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஜோடியாக நடிக்கிறாரா மமிதா பைஜு?

TAGGED:CompanyheroProductionRavi Mohan DirectorYogi Babuகதாநாயகன்தயாரிப்புநிறுவனம்யோகி பாபுரவி மோகன் இயக்குனர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?