சென்னை: குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான வீடியோவை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.
2015 ஆண்டு வெளியான ’பிரேமம்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இவர் தமிழில், மாரி 2, பாவக்கதைகள், அமரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தற்போது, இந்தியில் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர், படபிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இருப்பினும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது குடும்பாத்துருடன் நேரத்தைச் செலவிடுவது இவரது வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் தனது தாத்தா, பாட்டி, பெற்றோர் மற்றும் சகோதரியுடன் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகச் செலவிட்ட தருணங்களை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்ட சாய்பல்லவி, எனது வாழ்வில் இவர்கள் இருக்கும் அந்த பருவம் அழகானது என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில், ”என் டெலிலா! நீ இருக்கும் போது தான் எனக்கு வசந்தம். எங்கள் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.