ஐதராபாத்: ‘எல்லம்மா’ திரைப்படத்தில் கதாநாயகனாக தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத், தற்போது நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.
‘பலாகம்’ திரைப்படத்தை இயக்கிய வேணு எலிடாண்டி இயக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தில் கதாநாயகனாக தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘எல்லம்மா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் பார்சி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கிறார்.
முதலில் சாய் பல்லவி, மிருணாள் தாக்கூர் அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மமிதா பைஜு இந்தப் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மமிதா பைஜு ஏற்கனவே பல திரைப்படங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சூர்யாவின் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.