சென்னை: இயக்குனர் பாண்டிராஜின் அடுத்த படமான ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை வழங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பரிமளா & கோ’.
இந்தப் படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன் மற்றும் அனந்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘வாச்சா உடாத’ பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, விமல் மற்றும் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ‘பரிமளா & கோ’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.