சென்னை; ரிதன்யா மரணம் வெறும் தற்கொலை அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை இது. இந்த நூற்றாண்டிலும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ரிதன்யா தற்கொலை குறித்து பேசியுள்ளார் நாதகவின் சீமான்.
அரசியல் அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் மீது எளிதில் ஜாமினில் வெளிவரும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என சீமான் சாடியுள்ளார்.