By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகனை மார்பில் அணைத்தப்படியே இறந்து கிடந்த தாய்
    1 Min Read
    சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?
    1 Min Read
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன
    1 Min Read
    ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை தோசை செய்து அசத்துங்கள்
    1 Min Read
    அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?
    1 Min Read
    தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
    1 Min Read
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விவசாயிகளுக்கு பலன் தரும் பணப்பயிராக வெட்டிவேர் சாகுபடி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > விவசாயிகளுக்கு பலன் தரும் பணப்பயிராக வெட்டிவேர் சாகுபடி
விவசாயம்

விவசாயிகளுக்கு பலன் தரும் பணப்பயிராக வெட்டிவேர் சாகுபடி

Nagaraj
Last updated: July 9, 2025 5:13 pm
By Nagaraj 4 Min Read
Share
SHARE

சென்னை: இயற்கை சீற்றங்களான புயல், காற்று, வெள்ளம் மற்றும் அதிக வெயில் காரணத்தால் அடிக்கடி இன்னலுக்கு உள்ளாகும் கடலோர மாவட்டங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இப்பிரச்னைகளை தாங்கி பலன் தரும் பணப்பயிராக வெட்டிவேர் சாகுபடி அமைந்துள்ளது. இது இயற்கை அளித்த சிறப்பான வரம் ஆகும்.

தமிழில் வெட்டிவேர் என்றும், வடமாநிலங்களில் கஷ் என்றும் அழைக்கப்படும் புல் வகை தாவரத்தின் நறுமணம் வீசும் வேர்கள் பலவித பயன்பாடுகளைக் கொண்டது. இதிலிருந்து நறுமண எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. பல்வேறு வணிக நறுமண உற்பத்திக்கும், அரோமா தெரப்பி எனப்படும் நறுமண மருத்துவ உபயோகத்திற்கும் உணவு மற்றும் வாசனை தொழிற்சாலைகளிலும், மேலும் அழகு சாதன மருந்து பொருட்களிலும் மணம் மூட்ட பயன்படுத்தப்படுகிறது.

இந்த நறுமண வேர்கள் நேரடியாக தலையணை ஆகவும், கூடையாக பின்னப்பட்டும், ஊதுபத்தியாகவும் ஆடைகளின் இடையில் வைக்கப்படும் வாசனை பைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. உலக உற்பத்தியான 300 டன் என்ற அளவு உற்பத்தி செய்யப்படும் வெட்டிவேர் எண்ணெய் இந்தியாவில் 20 டன் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ஆண்டிற்கு சுமார் 100 டன் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மீதமுள்ள 80% தேவைக்கு இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா முதலிய கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே வெட்டிவேர் சாகுபடி செய்யும் பரப்பினை அதிகரிக்க ஏற்ற சூழல் உள்ளது. வெட்டிவேர் பொதுவாக சரிவிற்கு குறுக்கான கரைகளில் நடப்பட்டு வருகின்றது

உத்தரபிரதேசம் முதலான வட மாநிலங்களில் வளரும் வெட்டிவேர் உலகத் தரமான எண்ணெய் தரவல்லது. தமிழகம் முதலான தென் மாநிலங்களில் அதிக விளைச்சல் கிடைக்கும்.

தென்னிந்தியாவில் உள்ள வெட்டிவேர் ரகங்கள் தடிமனான தண்டும், அகல இலையும், குறைவான கிளைக்கும் தன்மையுடைய நீண்ட வேர்களையும் உடையவை. விதைகள் முளைக்காத தன்மையை கொண்டிருக்கும். இவை வேர்க்கட்டைகள் மூலம் நடவு செய்ய ஏற்றவை ஆகும். தென்னிந்திய வகையில் பூசா கலப்பினம் –ஏழு, கலப்பினம்-8, சுகந்தா கேஎச்-8, கேஎச்- 40 மற்றும் ஓடிவி – 3 போன்ற வணிக முறை சாகுபடிக்கான ரகங்கள் ஆகும்.

தென்னிந்திய வகை வெட்டிவேர் 15- 20 சென்டிமீட்டர் தரைமட்ட தண்டும், உயர மேல் பகுதியும் கொண்ட வேர்க்கட்டைகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். வடிகால் தன்மையுடைய மணல் கலந்த இருப்பொறை மண் மற்றும் கரிம சத்துள்ள செம்பொறை மண் வெட்டிவேர் சாகுபடிக்கு ஏற்றது. களிகலப்பு மண்ணில் சாகுபடி செய்யலாம். ஆனால் களிமண்ணில் சாகுபடி செய்ய முடியாது. கவர் மற்றும் உவர் நிலங்களில் கார அமிலத்தன்மை 8.5 -10 வரை தாங்கி வளரும். நீர் தேங்கினாலும் பாதிப்பில்லை. நீரில் கரைந்த கடின தனிமங்களான ஆர்சனிக், குரோமியம், பாதரசம், காரியம் இவற்றை உறிஞ்சக்கூடியது. தென்னிந்தியாவில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடவு பருவம் ஆகும்.

நிலம் தயாரிப்பு மற்றும் நடவு

ஆழமாக உழவு செய்தல் நன்று. இரண்டு முதல் மூன்று முறை 20- 25 சென்டிமீட்டர் ஆழத்திற்கு உழவு செய்து பல பருவ களைச்செடிகளை அகற்றி 10 டன் தொழுவுரத்தையும், அடியுரத்தையும் கடைசி உழவில் இடவும். பண்படுத்திய நிலத்தில் 1 மீட்டர் அகலமும், வயலின் நீளமும் உள்ள மேட்டுப்பாத்திகள் அமைத்து 45க்கு30 அல்லது 60க்கு 30 என்ற இடைவெளியில் அடிக்கட்டை பக்க தூர்களை 10 சென்டிமீட்டர் ஆழத்தில் நட வேண்டும். தேர்வு செய்யும் ரகம் மற்றும் இடைவெளிக்கு ஏற்ப எக்டேருக்கு 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான பக்கத்தூர்கள் தேவைப்படும். மண் ஈரம் காயாமல் நீர் பாய்ச்சுவது ஏற்றதாகும்.

உர நிர்வாகம் மற்றும் நீர் பாசனம்

வளமான மண்ணிற்கு இரசாயன உரம் தேவையில்லை. ஆனால் பயிர் வளர்ச்சிக்கும் அதிக விளைச்சலுக்கும் வளம் குறைந்த மண்ணில் தொழு உரம் 10 டன்களும், 25 முதல் 50 கிலோ வரை தழை மற்றும் மணிச்சத்து அவசியம். வறண்ட பகுதிகளில் மழை இல்லாத பருவத்தில் ஆண்டுக்கு 8-10 முறை நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன் நீர் பாய்ச்சக் கூடாது.

சாகுபடி தொழில் நுட்பங்கள்

வளர்ந்த பயிரில் களை வளராது. பயிரின் வளர்ச்சி பருவத்தில் இரண்டு ஆண்டுகள் மூன்று முறை தரைக்கு மேலே 20-30 சென்டிமீட்டர் செடியின் உயரத்தில் உள்ள இலைகளை அறுத்து விட வேண்டும், முதல் அறுப்பு 4- 5து மாத வயதிலும், இரண்டாவது அறுப்பு 2ம் ஆண்டு ஆரம்பத்தில் பூப்பதற்கு முன்னரும், மூன்றாவது அறுப்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன் குளிர்காலத்திலும் செய்ய வேண்டும். பொதுவாக பூச்சி மற்றும் நோயினால் பெரும் சேதாரம் ஏற்படுவதில்லை இருப்பினும் வறண்ட காலங்களில் கரையான் மற்றும் வண்டுகளின் புழுக்கள் வேர்களை தாக்கும். இதற்கு வேப்பம் புண்ணாக்கினை எக்டேருக்கு 5 டன் அளிப்பதனால் இவற்றை கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

நடவிலிருந்து 15 முதல் 24 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் 18 மாத வயதில் அறுவடை செய்யப்பட்ட வேர்களில் இருந்து தரமான எண்ணெய் கிடைக்கும். அறுவடை செய்யப்பட்ட வேர்களை அதன் தழைப்பகுதியில் இருந்து 5-10 சென்டிமீட்டர் நீள துண்டுகளாக நறுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு எண்ணெய் வடிக்க எடுத்துச் செல்லலாம். அதிக நாட்கள் வெயிலில் காய வைத்தால் எண்ணெய் அளவு குறையும். காய வைக்கும் போது அதிக கனமில்லாமல் வேர்களை பரப்பி பூஞ்சாண தாக்குதல் வராமல் உணர்த்த வேண்டும்.

எண்ணெய் விளைச்சல் மண்தன்மை, வேரின் வயது, அறுவடை நேரம் காய வைத்தால் மற்றும் காய்ச்சி வடித்தல் முறையினை பொறுத்து அமையும்.

You Might Also Like

மருத்துவக்குணங்கள் அடங்கிய வெட்டிவேர் அளிக்கும் நன்மைகள்

மருத்துவக்குணங்கள் அடங்கிய வெட்டிவேர் அளிக்கும் நன்மைகள்

தலைமுடிக்கு ஊட்டம் அளிக்கும் மருதாணி இலைகள்

தாளடி பயிரைக் காப்பாற்ற வரும் 0ம் தேதி வரை காவிரி தண்ணீரை திறந்து விட கோரிக்கை

உளுந்து செடிகளை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

TAGGED:cash cropfoliagefungal attackroot rotrootsதழைப்பகுதிபணப்பயிர்பூஞ்சாண தாக்குதல்வெட்டிவேர்வேர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?