புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23ம் தேதி உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை மோடி சந்திக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யா சென்றார். பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் இந்தப் பயணம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அங்கு, பிரதமர் ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருதை புடின் வழங்கினார். மோடி-புடின் சந்திப்பு விமர்சனத்துக்குள்ளானது.
குறிப்பாக பிரதமர் மோடியின் ரஷிய பயணம் குறித்து உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், “உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூர ஏவுகணை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 37 பேர் பலி.13 குழந்தைகள் உட்பட 170 பேர் காயம். ரஷ்ய ஏவுகணை உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையில் பலர் புதைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவடையவில்லை. இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.