புதுடெல்லி: வாக்கு திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
வாக்கு திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவு தருமாறு காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
வாக்கு திருட்டு என்பது ஒரு நபர், ஒரு வாக்கு என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையை தாக்கும் செயலாகும். சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு வெளிப்படையான வாக்காளர் பட்டியல் அவசியம். எனவே பொதுமக்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக தங்கள் ஆதரவை http://votechori.in/ecdemand என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், 96500 03420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் தெரிவிக்கலாம்.
இந்தப் போராட்டம் நமது ஜனநாயகத்தை காப்பதற்கானது. நமது வாக்குரிமையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அந்த பதிவில் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.