புதுடில்லி: உள்துறை அமைச்சகம் உத்தரவு… டில்லியில் பயிற்சி மையத்தில் மழைநீர் தேங்கியதில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
டில்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் டில்லி ராஜேந்திரா நகரில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்தது. . இதனால் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள் அதிர்ச்சியில் வெளியேறினர். சிலர் தப்பினர் 10க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியாகினர். 13 பேர் மீ்ட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சிமைய உரிமையாளர் உள்பட 5 பேரை கைது போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உண்மை தன்மையை கண்டறிய விசாரணை குழு அமைத்து 30 நாட்களுக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.